.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைககளை எவ்வித தலையீடுகளும் இன்றி சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன, மத, கட்சி அல்லது நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கை மக்கள் அனைவரினதும் அபிலாஷைகளை நனவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் இலக்குகளிலிருந்தும் பின்தங்கிய போக்குகளிலிருந்தும் விலகி நாட்டைக் கட்டியெழுப்பும் பொது வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்ப்பதே இன்றைய தேவையென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.