திரைத்துறையில் கால்பதிக்கும் பராக் ஒபாமாவின் மகள்

திரைத்துறையில் கால்பதிக்கும் பராக் ஒபாமாவின் மூத்த மகள்

by Bella Dalima 06-04-2023 | 4:27 PM

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மாலியா ஒபாமா (Malia Obama) திரைத்துறையில் விரைவில் கால்பதிக்க உள்ளார். 

டொனால்ட் குரோவர் (Donald Glover) தயாரிக்கும் குறும்படத்தை மாலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மாலியா ஒபாமா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ஒரு குறும்படத்தில், முதல் முறையாக இயக்குநராக தனது பணியை தொடங்க உள்ளதாக டொனால்ட் குளோவர் சமீபத்தில் தெரிவித்தார். 

டொனால்ட் க்ளோவர் மற்றும் மாலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே,  தொலைக்காட்சி தொடரான Swarm-இல் பணிபுரிந்துள்ளனர்.

மாலியா ஒபாமா Harvard பல்கலைக்கழக பட்டதாரி. அவர் லீனா டன்ஹாமின் (Lena Dunham)பெண்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, Weinstein நிறுவனத்தில் Halle Berry நடித்த அறிவியல் புனைக்கதை நாடகத் தொடரான Extant-இல் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.