பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்

பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்

பாப்பரசர் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2023 | 5:26 pm

Colombo (News 1st) சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (86)  இன்று (01) அங்கிருந்து வௌியேறியுள்ளார். 

கடந்த புதன்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது உடல்நிலை சற்று சீராக இருப்பதாகவும் சனிக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து வௌியேறுவார் எனவும்  வத்திக்கான் செய்தி தொடர்பாளர் முன்னதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து இன்று வௌியேறியுள்ளார். 

பாப்பரசருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) நரம்பு வழியாக செலுத்தப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அவரது உடல் நிலை மேம்பட்டிருப்பதன் காரணமாக, பாப்பரசரின் புனித வார செயற்பாடுகளுக்கான  அட்டவணை விபரங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. 

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இந்த வாரம் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும் ஏப்ரல் 9 ஆம் திகதி வௌிப்புற உயிர்த்த ஞாயிறு திருப்பலியும் பாப்பரசரின் தலைமையில் இடம்பெறும் என அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரோமில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறையில் புனித வியாழன் ஆராதனைகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறும் முன், பாப்பரசர் பிரான்சிஸ், பத்திரிகையாளர்களுடன் உரையாடியபோது, ​​மருத்துவ ஊழியர்களைப் பாராட்டிக் கூறினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்