STEAM கல்வி முறை இலங்கையில் அறிமுகம்

by Bella Dalima 31-03-2023 | 9:30 PM

Colombo (News 1st) உலகின் 96 நாடுகளில் அமுல்படுத்தப்படும் STEAM கல்வி முறை இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தை மையமாகக்கொண்டு STEAM கல்வி முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு  கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்றது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த , தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் சேனாரத்ன, தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

ஏனைய மாவட்டங்களுக்கான STEAM கல்வி முறை ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

1999 ஆம் ஆண்டு அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட STEAM கல்வித் திட்டத்தின் ஊடாக, பாடவிதான கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை இலகு செயற்பாடுகள் மூலம் அறிவதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிட்டுகின்றது. 

இதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதப் பிரிவுகளும் அடங்குகின்றன.