8,400 மில்லியன் ரூபா நீர் கட்டணம் நிலுவை

8,400 மில்லியன் ரூபா நீர் கட்டணம் நிலுவை: நெருக்கடியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

by Bella Dalima 31-03-2023 | 4:27 PM

Colombo (News 1st) பல மாதங்களாக நீர் கட்டணங்களை செலுத்தாத 40,000-இற்கும் அதிகமான பாவனையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

1600 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை அறவிடப்பட வேண்டியுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பாவனையாளர்களில் 15,000 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வீட்டுப் பாவனையாளர்கள், வியாபார நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 

கடந்த செப்டம்பர் மாதம் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், நீர் கட்டண பட்டியல்களை செலுத்துதல் 40 வீதமாக குறைவடைந்துள்ளது. 

தற்போதைய நிலையில், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பாவனையாளர்களிடமிருந்து 8,400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது. 

இதன் காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.