மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைத்து சமூக செயற்பாட்டாளர்கள் மூவரை கைது செய்த பொலிஸார்

மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைத்து சமூக செயற்பாட்டாளர்கள் மூவரை கைது செய்த பொலிஸார்

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2023 | 7:57 pm

​Colombo (News 1st) மிரிஹானயில் இன்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர். 

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான – ஜூபிலிகணுவவிற்கு  அருகில் இன்று மாலை  போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார ,  டானிஷ்  அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்தனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்