நியூஸிலாந்திடம் தோல்வி: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி

நியூஸிலாந்திடம் தோல்வி: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி

நியூஸிலாந்திடம் தோல்வி: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2023 | 3:00 pm

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என அந்த அணி கைப்பற்றியது.

Hamilton-இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நவனிது பெர்னாண்டோ 2 ஓட்டங்களையும், அனுபவ வீரர்களான குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணி 41.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பெத்தும் நிஸங்க 57 ஓட்டங்களையும் அணித்தலைவர் தசுன் சானக்க 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

Matt Henry, Henry Shipley, Daryl Mitchell ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்தும் ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

59 ஓட்டங்களுக்கு நியூஸிலாந்தின் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த Will Young – Henry Nicholls ஜோடி  பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தின் மூலம் நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினர். 

நியூஸிலாந்து 32.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Will Young 86 ஓட்டங்களையும், Henry Nicholls 44 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்தமையால், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேரடியாக பங்கேற்கக் கூடிய வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது.

தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியே இவ்வாண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நுழைய வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்