உர விலையை மேலும் குறைக்க அமைச்சரவை பத்திரம்

உர விலையை மேலும் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Bella Dalima 31-03-2023 | 4:09 PM

Colombo (News 1st) உர விலையை மேலும் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அதற்கமைய, அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களில் தற்போது 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற யூரியா உர மூடைக்கான விலையும் குறைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அரச உர நிறுவனங்களில் தற்போது 15,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற  BANDY உர மூடைக்கான விலையும் இதனூடாக குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். 

தற்போது ஒரு மூடை யூரியா உரத்திற்கான விலையை 11,000 ரூபாவாக தனியார் விற்பனையாளர்கள் குறைத்துள்ளனர்.

அதேபோல, ஒரு மூடை BANDY உரத்தை 19,000 ரூபாவிற்கு தனியார் விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.