.webp)
Colombo (News 1st) சபரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதிய மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23, 24 மற்றும் 25 வயதுடைய தெஹிவளை, மொரட்டுவை, அம்பலாங்கொடை, வெலிமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நால்வரும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சபரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து புதிய மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.