.webp)
Colombo (News 1st) உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.
உர விநியோகத்திற்காக கடந்த முறை 6.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வீழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மீண்டெழுவதற்கான காலமாக இந்த பருவம் அமையும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் வழமை நிலையை அடையும் வரை, அவர்களுக்குத் தேவையான நிதி ரீதியான உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.