வென்னப்புவயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் பலி

வென்னப்புவயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் பலி

வென்னப்புவயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் பலி

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2023 | 6:31 pm

Colombo (News 1st) வென்னப்புவ – பேரகஸ்ஹந்திய வீதியில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

தங்கச் சங்கிலியை திருடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக இன்று (29) மாலை 03 மணியளவில் மாரவில பொலிஸார் சென்றுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். 

கைது நடவடிக்கையின் போது அந்நபர் பொலிஸாரை வாளால் தாக்கியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது, காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்