பால் தேநீர் விலை குறைப்பு

பால் தேநீர் விலை குறைப்பு

by Staff Writer 27-03-2023 | 2:34 PM

Colombo (News 1st) இன்று (27) முதல் பால் தேநீர் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பால் தேநீரொன்றின் விலை 100 ரூபாவாக காணப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

அதற்கு இணையாக பால் தேநீரின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.