எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் 3 நிறுவனங்கள்

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க 3 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

by Staff Writer 27-03-2023 | 6:35 PM

Colombo (News 1st) இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டரில் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய சீனாவின் சினொபெக்(Sinopak), அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம்(United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ்(R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.