.webp)
Colombo (News 1st) கெப்பித்திகொல்லாவயில் தனது தாயை கொலை செய்த மகனொருவர் 08 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், 2015 ஆம் ஆண்டு தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.