வீணான உணவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது

2021-இல் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

by Bella Dalima 25-03-2023 | 4:23 PM

Colombo (News 1st) முறையான போக்குவரத்து இன்மையால், வருடாந்தம் 19% மரக்கறிகளும் 21% பழங்களும் அழிவடைவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள் அழிவடைவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத பழங்களின் அளவு 90,151 மெட்ரிக் தொன்னாகும்.

இதேவேளை, அறுவடைக்கு பின்னரான அழிவுகளும்  அதிகமாகவே காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

அறுவடைக்கு பின்னரான சேதங்களினால்  40% பயிர்கள் இழக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நகர்ப்புறங்களிலும் அதிகளவு உணவு வீணாவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது என குறிப்பிட்டார்.