ஸ்டைன் ஸ்டூடியோவின் முதலாவது கலையகத்திற்கு காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது

by Bella Dalima 25-03-2023 | 6:07 PM

Colombo (News 1st) இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோவின் ( Stein Studio)முதலாவது கலையகத்திற்கு புகழ்பெற்ற திரைப்பட இயகுநரும் நடிகருமான காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட்டது.

இலங்கை சினிமாத்துறைக்கு பெரும் பங்காற்றிய  காமினி பொன்சேகாவின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது.

அதிநவீனமயப்படுத்தப்பட்ட இரத்மலானை ஸ்டைன் ஸ்டூடியோ, தெற்காசியாவின் மிகப்பெரிய கலையகமாகும்.

இலங்கை மக்களுக்கு சர்வதேச அனுபவங்களை வழங்கும் ஸ்டைன் ஸ்டூடியோ, 06 பிரமாண்டமான கலையகங்களைக் கொண்டுள்ளது.

இலங்கை சினிமாத்துறையின் முன்னணி நடிகரும் திரைப்பட இயக்குநருமான காமினி பொன்சேகாவின் நினைவாக ஸ்டைன் ஸ்டூடியோவின் முதல் கலையகம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் காமினி பொன்சேகாவின் புதல்வர் தமித் பொன்சேகா மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சிரேஷ்ட கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுனில் கனோஜியா, கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் நிறைவேற்றுக் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

 

ஏனைய செய்திகள்