.webp)
Colombo (News 1st) மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் ஒருவரின் கைகளை துண்டித்த சம்பவத்தில், தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான குறித்த நபர் கொரலவெல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (24) சட்டத்தரணியூடாக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரை நேற்று முதல் 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
மின்னியலாளர் ஒருவரின் கைகளை வெட்டிச் சென்ற சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இரவு கொரலவெல்லயில் பதிவானது.