பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இலட்சக்கணக்கான கோழிகளை அழிக்கும் ஜப்பான்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இலட்சக்கணக்கான கோழிகளை அழிக்கும் ஜப்பான்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு: இலட்சக்கணக்கான கோழிகளை அழிக்கும் ஜப்பான்

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2023 | 5:00 pm

Japan: ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஒரு பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள பகுதிகளில் கோழிகளையும் முட்டைகளையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக குறித்த பண்ணையில் உள்ள சுமார் 3,30,000 கோழிகளை அழிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்