நியூஸ்ஃபெஸ்டிற்கு ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி ஔிபரப்பிற்கான விருது

நியூஸ்ஃபெஸ்டிற்கு ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி ஔிபரப்பிற்கான விருது

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2023 | 8:09 pm

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான ரைகம் தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் (Raigam Tele'es) நியூஸ்ஃபெஸ்ட், சக்தி TV மற்றும் சிரச TV என்பன பல விருதுகளை சுவீகரித்தன.

ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி ஆவணத் தொகுப்பிற்கான விருதினை நியூஸ்ஃபெஸ்டின் ரந்திக்க ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த இசைநிகழ்ச்சியாக "சஜ்ஜய" தெரிவாகியுள்ளது.

ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி மூல செய்தி வாசிப்பாளருக்கான விருது TV1-இன் நவேக்ஷா குணசேகர வசமானது. 

ஆண்டின் சிறந்த தமிழ் மொழி மூல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது சக்தி TV-இன் ஞானக்குமாரன் கணாதீபன் வசமானது. 

ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி மூல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருதை  TV-1 இன் சொனாலி வணிகபடுகே சுவீகரித்தார். 

ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி ஔிபரப்பிற்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட் சுவீகரித்தது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்