English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Mar, 2023 | 2:43 pm
Colombo (News 1st) இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து அணிக்காக Finn Allen 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை வீரர் சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த நிலையில், 275 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணியின் மூன்று வீரர்களை தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்தனர்.
குசல் மென்டிஸ் மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.
அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 18 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொண்டார்.
நியூஸிலாந்து அணியின் Henry Shipley 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
27 May, 2023 | 07:06 PM
24 May, 2023 | 11:45 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS