வட மாகாண பூப்பந்தாட்டப் போட்டிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

வட மாகாண பூப்பந்தாட்டப் போட்டிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2023 | 7:39 pm

Colombo (News 1st) வட மாகாண பூப்பந்தாட்டப் போட்டிகள் வட மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று (24) ஆரம்பமாகின.

கிளிநொச்சி வட மாகாண விளையாட்டு கட்டடத்தொகுதியின் உள்ளக அரங்கில் ஆரம்பமான இந்த போட்டிகளில் 5 மாவட்டங்களை சேர்ந்த 500 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

13, 15, 17, 19 வயதுப் பிரிவின் ஆண், பெண் தனி மற்றும் இரட்டையர், கலப்பு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன

இதனிடையே, 20, 40, 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான திறந்த பூப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இன்று ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்