நீதியரசர்கள் மீது கை வைக்காதே: உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி வழி போராட்டம்

நீதியரசர்கள் மீது கை வைக்காதே: உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி வழி போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2023 | 7:53 pm

Colombo (News 1st) 'நீதியரசர்கள் மீது கை வைக்காதே' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி வழி போராட்டம் உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

சட்டத்தரணிகள் மகா சபையினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்பாக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலி, அவிசாவளை நீதிமன்ற வளாகங்களில் சட்டத்தரணிகள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்