சர்வதேச நாடுகள் வழங்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2023 | 7:21 pm

Colombo (News 1st) சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும் கட்டாயம் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்படும் எனும் உறுதிப்பாட்டினை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

தற்போது நலிவடைந்த பிரிவினரை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அதில் அரசியல் கலந்துள்ளதனால், தமக்கு அதில் நம்பிக்கையில்லாத பட்சத்திலேயே இதனைக் கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்