பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மிக பழமையான பைபிள்

பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மிக பழமையான Hebrew பைபிள்

by Chandrasekaram Chandravadani 23-03-2023 | 9:23 AM

Colombo (News 1st) மிகவும் பழைமையானதும் முழுமைப்படுத்தப்பட்டதுமான Hebrew Bible இஸ்ரேலின் தெல் அவீவ் (Tel Aviv ) நகரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பைபிளானது ஏலத்தில் விடப்படுவதற்கு முன்னர் இவ்வாறு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த பைபிள் சுமார் 1100 வருடங்களுக்கு முன்னர் எகிப்து அல்லது லெவன்ட்டில் உள்ள ஒரு எழுத்தாளரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

சரியான உச்சரிப்பு, 

நிறுத்தற்குறிகள், உயிரெழுத்துகள் கொண்ட கையெழுத்துப் பிரதியின் எஞ்சியிருக்கும் புத்தகம் இதுவாகும்.

நியூயோர்க் நகரில் எதிர்வரும் மே மாதத்தில் பைபிள் ஏலத்தில் விடப்படவுள்ளது.

30 மில்லியன் அமெரிக்க டொலர் தொடக்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஏலம் விடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு விற்கப்பட்டால் ஏலமொன்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முதலாவது வரலாற்று நூலாக இது பதிவாகும் என கூறப்படுகின்றது.