வௌிநாட்டு தூதுவர்களுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு

வௌிநாட்டு தூதுவர்களுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2023 | 7:52 pm

Colombo (News 1st) 12 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சர்வதேச தூதுக்குழுவினர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு சந்தித்துள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். 

இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், அரசியலமைப்பை பாதுகாத்தல் , உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்