ஜப்பான் 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களுக்கு உதவ ஜப்பான் 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

by Bella Dalima 23-03-2023 | 3:36 PM

Colombo (News 1st) இலங்கையில் சமூக பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்க 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.

'நெருக்கடிக்குள்ளான பெண்களை வலுவூட்டுவோம்' என்ற செயற்றிட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவினூடாக ஜப்பான் அரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இந்த நிதி மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளான 1200-க்கும் அதிகமான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும்,  நுண் தொழில்முயற்சியில் ஈடுபட்டு, வீழ்ச்சியை சந்தித்துள்ள 500 பெண்களுக்கும், வறுமை மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 2000-ற்கும் அதிகமானோருக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.