கீரை பறித்துக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையை இழுத்துச்சென்ற முதலை

கீரை பறித்துக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையை இழுத்துச்சென்ற முதலை

கீரை பறித்துக் கொண்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தையை இழுத்துச்சென்ற முதலை

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2023 | 2:10 pm

Colombo (News 1st) அம்பாறை – மாவடிப்பள்ளி பகுதியில் முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

சம்மாந்துறை கோரக்கோவில் பகுதியில் வசித்து வந்த 04 பிள்ளைகளின் தந்தையான 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று(22) மாலை ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி கீரை பறித்துக் கொண்டிருந்த குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிருந்தது.

சடலம் மீட்கப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்