பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள்

6 ஆம் தரத்திற்கு பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

by Bella Dalima 22-03-2023 | 3:12 PM

Colombo (News 1st 6 ஆம் த)ரத்திற்கு பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கண்டி தர்மராஜ கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 180 புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆனந்த கல்லூரிக்காக 179 புள்ளியும் கொழும்பு நாலந்த கல்லூரிக்காக 176 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விஷாகா வித்தியாலத்திற்கான வெட்டுப்புள்ளியாக 181 புள்ளியும் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலத்திற்கான வெட்டுப்புள்ளியாக 178 புள்ளியும் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலத்திற்கான வெட்டுப்புள்ளியாக 175 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் தகுதிபெற்று இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காக தமக்கு கிடைத்த பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் அது தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகளை ஒன்லைன் முறைமையிலோ கல்வியமைச்சிடமோ சமர்பிக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகள் தொடரபான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள www.newsfirst.lk எனும் எமது இணையத்தள முகவரிக்குள் பிரவேசியுங்கள்.

2022 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக்கு அமைய, 2023-இல் 06 ஆம் தரத்திற்கு பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, 

கொழும்பு ​ரோயல் கல்லூரி - 182
கண்டி தர்மராஜ கல்லூரி -  180  
கொழும்பு ஆனந்த கல்லூரி - 179
கொழும்பு நாலந்த கல்லூரி - 176  
கொழும்பு விஷாகா வித்தியாலம் - 181 
கொழும்பு தேவி பாலிகா வித்தியாலம் - 178 
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலம் - 175 

வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் தகுதிபெற்று இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காக தமக்கு கிடைத்த பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் அது தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகளை ஒன்லைன் முறைமையிலோ கல்வி அமைச்சிடமோ சமர்ப்பிக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.