எகிப்தின் ஒத்துழைப்புகளைக் கோரும் இலங்கை

கடற்றொழில் அபிவிருத்தியில் எகிப்தின் ஒத்துழைப்புகளைக் கோரும் இலங்கை

by Bella Dalima 22-03-2023 | 7:15 PM

Colombo (News 1st) சர்வதேச முதலீடுகளும் ஒத்துழைப்புகளும் வரவேற்கப்படுவதாக எகிப்து தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான எகிப்து தூதுவர்  Maged Mosleh-விற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும் கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த எகிப்து தூதுவர், தமது நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.