காணாமல் போயிருந்த 3 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

எல்லேவல நீர்வீழ்ச்சியில் காணாமல் போயிருந்த 3 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

by Staff Writer 22-03-2023 | 2:04 PM

Colombo (News 1st) வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் 3 இளைஞர்களின் சடலங்கள் இன்று(22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்படை சுழியோடிகளினால் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போயிருந்த ஒருவரின் சடலம் நேற்று(21) மீட்கப்பட்டிருந்தது.

நேற்று(21) காலை 10 இளைஞர்கள் கொண்ட குழுவினர் எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி நால்வர் காணாமல் போயிருந்தனர்.

கல்முனையை சேர்ந்த 20, 21 வயதுகளையுடைய 04 இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.