IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு

IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

21 Mar, 2023 | 3:57 pm

Colombo (News 1st) நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவாகியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (20)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் சில நாட்களில் இந்தியா பயணிக்கவுள்ளதாக Jaffna Stallions Cricket Academy-இன் செயலாளர்  டொக்டர் K. ஶ்ரீதரன் தெரிவித்தார். 

இது ஒரு மிகப்பெரிய அடைவு என குறிப்பிட்ட டொக்டர் K. ஶ்ரீதரன், இந்தியாவில் பெற்ற அனுபவங்களை வியாஸ்காந்த் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவார் என நம்புவதாகவும் கூறினார். 

இதேவேளை, தற்போது தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும் என விஜயகாந்த் வியாஸ்காந்த் குறிப்பிட்டார். 

மேலும், குமார் சங்கக்கார உள்ளிட்ட தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இதன்போது அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்