.webp)
Colombo (News 1st) கடனுதவி திட்டத்தின் இரண்டு முக்கிய தூண்களாக ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF)வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிதியத்தில் இலங்கை விடயங்களைக் கையாளும் அதிகாரிகள், ஒன்லைன் ஊடாக வாஷிங்டனிலிருந்து இன்று (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நொசாகி (Masahiro Nozaki), சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட திட்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.