.webp)
Colombo (News 1st) வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய நான்கு பேரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்முனையை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இளைஞரின் சடலத்தை வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள ஏனைய மூன்று இளைஞர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மழை காரணமாக தேடுதல் நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
10 பேர் கொண்ட குழுவினர் எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்றுள்ளதுடன், அவர்களில் கல்முனையை சேர்ந்த 4 பேர் இன்று முற்பகல் நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.