இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

by Bella Dalima 21-03-2023 | 4:06 PM

Colombo (News 1st) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.

மத்திய வங்கியினால் இன்று (21) வௌியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை விலை 334 ரூபா 93 சதமாகவும் பதிவாகியுள்ளது. 

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 331 ரூபா 71 சதமாகவும், விற்பனை விலை 349 ரூபா 87 சதமாகவும் இருந்தது.

இன்று, பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் கொள்விலை 387 ரூபா 67 சதம், அதன் விற்பனை விலை 411 ரூபா 19 சதம்.

யூரோவின் கொள்வனவு விலை 338 ரூபா 68 சதம், அதன் விற்பனை விலை 359 ரூபா 78 சதம்.

கனேடிய டொலரின் கொள்வனவு விலை 230 ரூபா 54 சதம், அதன் விற்பனை விலை 246 ரூபா 64 சதம்.

சுவிஸ் ஃப்ராங்கின் கொள்வனவு விலை 337 ரூபா 91 சதம், அதன் விற்பனை விலை 363 ரூபா 74 சதம். 

அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு விலை 210 ரூபா 84 சதம், அதன் விற்பனை விலை 225 ரூபா 80 சதம்.