நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு; பழுதுபார்க்க 12 நாட்களாகும்

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு; பழுதுபார்க்க 12 நாட்களாகும்

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு; பழுதுபார்க்க 12 நாட்களாகும்

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2023 | 4:13 pm

Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்றாவது மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்துவதற்கு 12 நாட்களாகுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இயந்திரத்தின் கொதிகலனிலுள்ள நீர்க்குழாய் வெடித்தமையால், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன குறிப்பிட்டார்.

குறித்த மின்பிறப்பாக்கி மிகவும் சூடாக இருப்பதால், அதனை பழுது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்றாவது மின்பிறப்பாக்கியின் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் கையிருப்பிலுள்ள டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி, மக்களுக்கு தொடர்ந்தும் மின்சாரத்தை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்