ஆங்கில மொழியில் மாத்திரம் சட்டக் கல்லூரி பரீட்சை: பிரேரணை தோல்வி

by Bella Dalima 21-03-2023 | 3:18 PM

Colombo (News 1st) சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் வௌியான வர்த்தமானி 112 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த வேண்டும் எனும் வர்த்தமானி அண்மையில் வௌியிடப்பட்டது.

இதனால் பெருமளவான சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பதால், அந்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான யோசனை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கிணங்க, சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த வேண்டும் என்ற பிரேரணைக்கு ஆதரவாக ஓர் வாக்கு மாத்திரமே வழங்கப்பட்டதுடன், அதற்கு எதிராக 113 வாக்குகள் அளிக்கப்பட்டன.