.webp)
Colombo (News 1st) விமான பயணச்சீட்டுகளுக்கான விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் நிறுவனங்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்தளை விமான நிலையத்தின் தரைத்தள நடவடிக்கைகளை விமான சேவை நிறுவனத்திடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.