.webp)
Colombo (News 1st) 'பூரு மூனா' என அழைக்கப்படும் களுமூனே ரவிந்து சங்க டி சில்வாவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து இந்த உத்தரவு பெறப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து 'பூரு மூனா' நேற்று முன்தினம்(18) அவிசாவளை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள மானியன்கம வீதியில் காரொன்றில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் மின் கம்பமொன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 662 கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான 'பூரு மூனா' என அழைக்கப்படும் நபர் காலி - ரத்கம மெதவல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.