பூரு மூனாவிடமிருந்து வெடிபொருட்கள் மீட்பு

பூரு மூனாவினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த 662 கிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 20-03-2023 | 3:50 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள 'பூரூ மூனா' என்றழைக்கப்படும் ரவிந்து வர்ணரங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அதிசக்தி வாய்ந்த 662 கிராம் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்ல பகுதியில் மின்கம்பம் ஒன்றுக்கு அருகில் சந்தேகநபரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அண்மையில் அவிசாவளை நீதிமன்றத்திற்கு அருகில் மானியன்கம வீதியில் காரொன்றுக்குள் இருந்த போது கைது செய்யப்பட்ட பூரூ மூனாவை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏனைய செய்திகள்