உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா - சட்ட மா அதிபரின் பரிந்துரை இன்று(20)

by Staff Writer 20-03-2023 | 5:16 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா என்பது தொடர்பான சட்ட மா அதிபரின் பரிந்துரை இன்று(20) கிடைக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் நேற்று(19) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

29 மாநகர சைபகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கான பதவிக்காலமே இவ்வாறு நிறைவடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன நிலையில், காலி மாவட்டத்தின் அல்பிட்டிய பிரதேச சபை, காலம் தாமதித்து ஸ்தாபிக்கப்பட்டமையால் அதன் பதவிக்காலம் நிறைவடையவில்லை.

இதனிடையே, பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக செயற்பாடுகள் மாகாண ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.