இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூஸிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

by Staff Writer 20-03-2023 | 7:24 PM

Colombo (News 1st) இலங்கை அணி்க்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என நியூஸிலாந்து கைப்பற்றியது.

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அனைத்து விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.