உலக வளங்களை பாதுகாக்க மீள் சுழற்சி செய்வோம்!

உலக வளங்களை பாதுகாக்க மீள் சுழற்சி செய்வோம்!

by Bella Dalima 18-03-2023 | 4:38 PM

உலக மீள்சுழற்சி தினம் இன்றாகும்.

2018 ஆம் ஆண்டு முதல் உலக மீள் சுழற்சி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

இயற்கை வளங்கள் வேகமாக பயன்படுத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் உருவாக்கப்பட்டது. 

மீள் சுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் உலகின் ஏழாவது வளமாக கருதப்படுகின்றது. 

இதனூடாக கார்பனீராக்சைடு ( CO2) உமிழ்வில் 700 மில்லியன் தொன் கழிவுகள் குறைக்கப்படுகின்றன.

இம்முறை 'ஆக்கபூர்வமான கண்டுபிடிப்பு' எனும் தொனிப்பொருளிலேயே மீள் சுழற்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாம் அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதுடன், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதால் மீள் சுழற்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்த மீள்சுழற்சியின் மூலம் பணத்தை சேமிக்க முடியும் என்பதுடன், எமது வளத்தையும் பாதுகாக்க முடியும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. 

மீள்சுழற்சி செய்யக்கூடிய பொதுவான பொருட்களில் பத்திரிகை, பிளாஸ்டிக் போத்தல்கள், தானியங்கள் அடங்கிய பெட்டிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தொடர்ந்தும் சூழல் மாசடைந்து வருமாயின், அடுத்த தசாப்த காலத்தில் பூமி அழிவடைவதைத் தடுக்க முடியாது எனவும் சில அறிக்கைகள் வௌியாகியுள்ளன.

மாசு மற்றும் பருவநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிவடைந்து வருவதுடன், கடந்த தசாப்தத்திலேயே அதிக வெப்பநிலையும் பதிவானதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.