புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

by Bella Dalima 18-03-2023 | 3:53 PM

Colombo (News 1st) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை நாடு கடத்தியமை மற்றும் உக்ரைன் போர் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குழந்தைகளை நாடு கடத்திய குற்றச்சாட்டின் கீழ் ரஷ்யாவின் ஜனாதிபதி ஆணையாளர் மரியா லோவா பெலோவாவை கைது செய்வதற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்காத போதிலும், ரஷ்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே ரஷ்யா பதிலளித்துள்ளது.  குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்துள்ளது. இருந்த போதிலும், ரஷ்ய எதிர்க்கட்சிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், ரஷ்ய ஜனாதிபதிக்கு வௌிநாடுகளுக்கு பயணிக்க முடியாமற்போகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.