சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 33 பேர் கைது

மட்டக்களப்பில் விசேட சோதனை; சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 33 பேர் கைது

by Staff Writer 18-03-2023 | 3:17 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள், தேசிய அடையாள அட்டையைக் கொண்டிராதவர்களே கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏனைய நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.