.webp)
Colombo (News 1st) 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் செல்லையா சதீஸ்குமார் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 15 வருடகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
செல்லையா சதீஸ்குமார் உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.