.webp)
Colombo (News 1st) தென்னிந்திய நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் வட இந்திய முதலீட்டாளர்களும் இன்று (17) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
92 பேர் கொண்ட குழுவினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த குழுவினரை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
இலங்கையில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினர் கலந்துரையாடவுள்ளதுடன், அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.