பிரான்ஸ் அரசின் தீர்மானத்திற்கு மக்கள் எதிர்ப்பு

ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் பிரான்ஸ் அரசின் தீர்மானத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

by Bella Dalima 17-03-2023 | 4:07 PM

France: பிரான்ஸில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 64 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. 

இதற்கிடையே, ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரித்து தலைநகர் பாரிஸில் சுமார் 7,000 பேர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. 

இதனையடுத்து, வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் ஏனைய நகரங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. 

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் சட்டமூலத்தை நிறைவேற்றும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் மரின் லுபென் தெரிவித்துள்ளார்.