.webp)
Colombo (News 1st) திடீரென நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் குழு தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த குழுவினர் பெப்ரவரி 17 ஆம் திகதி இரண்டு C17 Globemaster விமானங்கள் மூலம் நாட்டிற்கு வந்திருந்ததாக உதய கம்மன்பில தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தூதுக்குழுவில் அமெரிக்க FBI நிறுவனத்தின் பணிப்பாளரும் உள்ளடங்கியுள்ளாரா என்பது தொடர்பிலும் உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
குறித்த நபர்களை குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் எவரேனும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்களா என்ற தகவலும் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விடயங்களில் உள்ளடங்கியுள்ளது.