ரயிலுடன் மோதுண்ட கார்; இருவர் பலி

by Chandrasekaram Chandravadani 16-03-2023 | 2:12 PM

Colombo (News 1st) காலி - கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஹங்க​மையை  சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் மோதிய கார் சுமார் 300 மீட்டருக்கு அப்பால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.