நீல வர்ணங்களின் மோதல் இன்று(16) ஆரம்பம்

நீல வர்ணங்களின் மோதல் இன்று(16) ஆரம்பம்

by Staff Writer 16-03-2023 | 9:06 AM

Colombo (News 1st) நீல வர்ணங்களின் மோதல் என வர்ணிக்கப்படும் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று(16) ஆரம்பமாகவுள்ளது.

144 ஆவது தடவையாக நடத்தப்படவுள்ள நீல வர்ணங்களின் மோதல் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்வருட தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை தசித் மங்சநாயக்க வழிநடத்துவதுடன், கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணியின் தலைவராக ரொமேஷ் மென்டிஸ் செயற்படுகின்றார்.

இன்று(16) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை கொழும்பு SSC மைதானத்தில் நீல வர்ணங்களின் மோதல் மாபெரும் கிரிக்கெட் போட்டி  நடைபெறவுள்ளது.